வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 அக்டோபர் 2022 (17:15 IST)

பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு – காலையும் மாலையும் நேரம் நிர்ணயம்!

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் முழுவதும் பட்டாசு வெடிக்கும் நேர கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த சில ஆண்டுகளாகவே சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பட்டாசு வெடிக்கும் நேர கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் தீபாவளிக்கு முன்பு ஒரு சில நாட்களுக்கு முன் இந்த அறிவிப்பு வெளிவரும்.  

கடந்த ஆண்டு சென்னையில் காலை 6 மணி முதல் 7 மணி வரை வரையிலும் இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. மீறி பட்டாசு வெடித்தால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதே போல இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்று, கடந்த ஆண்டைப் போலவே  காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறத என்பது குறிப்பிடத்தக்கது.