வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 7 அக்டோபர் 2022 (18:14 IST)

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்திற்கு தமிழக ஆளுனர் ஒப்புதல்

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்திற்கு தமிழக ஆளுனர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி  உள்ளிட்ட விளையாட்டுகளினால் பலர் பனம் இழந்து தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் நிலை தொடர்ந்து வருகிறது.

இந்த ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை  தடை செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுகுறித்து, சமீபத்தில், இணையவழி சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் இயற்றுவது தொடர்பாக தமிழக அரசுக்கு அறிவுரை கூறுவதற்காக சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் அரசு ஒரு குழுவை அமைத்தது

இந்த குழுவின் பரிந்துரையின்படியும் பொதுமக்களிடம் கேட்ட கருத்துக்களின் அடிப்படையிலும் ஆன்லைன் ரம்மி தடை செய்ய அவசர சட்டம் தயாரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 


இந்த அவசர சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு விரைவில் பிரகடனப்படுத்தப்படும் என  தகவல் வெளியான நிலையில் , ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் அவசர சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்,ரவி  அக்டோபர் 1 ஆம் தேதி ஒப்புதல் வழங்கிவிட்டதாக தகவல் வெளியாகிறது.

Edited  by Sinoj