1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 9 அக்டோபர் 2022 (12:08 IST)

தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

fishermen
கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடித்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லும்போது எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவ்வப்போது இலங்கை கடற்படை கைது செய்து வருகிறது என்பதும் தமிழக மீனவர்களின் படகுகளை பறிமுதல் செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மீனவர்களின் சங்கம் மத்திய மாநில அரசுகளை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கச்சத்தீவு அருகே ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த இலங்கை கடற்படை மீனவர்களை கைது செய்ய முயற்சித்ததாகவும்,  இதனையடுத்து இலங்கை கடற்படையிடம் இருந்து தப்பிப்பதற்காக தங்கள் வலைகளை வெட்டிவிட்டு ராமேஸ்வரம் மீனவர்கள் தப்பித்து வந்ததாகவும் கூறப்படுகிறது
 
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை விரட்டியடித்த இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 

Edited by Siva