வெள்ளி, 28 மார்ச் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 28 மார்ச் 2025 (14:35 IST)

திமுக ஆட்சியில் கஞ்சா வியாபாரிகள் சுதந்திரமாக செயல்படுகின்றனர்.. ஈபிஎஸ்

Stalin Edappadi
திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்றது முதலே தமிழ்நாட்டில் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் சுதந்திரமாக செயல்படுவது அன்றாட நிகழ்வாக இருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் மேலும் கூறியதாவது:
 
இந்த தகவலை காவல்துறையினருக்கு தெரிவிப்பவர்களுக்கு எதிராக கொலைவெறித் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், காவலரையே கொலை செய்யும் அளவிற்கு போதைப்பொருள் வியாபாரிகள் துணிந்துவிட்டனர் என்பதையே உசிலம்பட்டி காவலர் முத்துக்குமாரின் கொலை உணர்த்துகிறது.
 
போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த இந்த திமுக அரசு எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
காவலர் முத்துக்குமாரின் மரணத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறார் திரு. 
முக ஸ்டாலின் ? 
 
காவல்துறை இனியாவது, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும்!
 
Edited by Mahendran