ஞாயிறு, 10 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 11 செப்டம்பர் 2024 (12:22 IST)

பீகாரில் மதுவிலக்கு இருக்கும்போது தமிழகத்தில் அமல்படுத்துவதில் என்ன சிக்கல்.? திமுகவுக்கு திருமாவளவன் நெருக்கடி.!!

Thiruma
பீகாரில் மது விலக்கு அமலில் இருக்கும் போது தமிழகத்தில் அமல்படுத்துவதில் என்ன சிக்கல் இருக்கிறது என்று  விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பினார்.

விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற உள்ள மது ஒழிப்பு மாநாட்டில், அனைத்து கட்சியைச் சேர்ந்தவர்களும் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அனைவரும் ஒரே குரலில், ஒருமித்த குரலில் மாநாட்டிற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

தேர்தலுக்கான அரசியல் நிலைப்பாடு என்பது வேறு என்றும் 24 மணி நேரமும் கட்சி சார்ந்த நிலைப்பாட்டை எடுக்க முடியாது என்றும் கூறினார். திமுக அளித்த வாக்குறுதிபடி மதுக்கடைகளை மூடி, பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பீகாரில் மது விலக்கு அமலில் இருக்கும் போது தமிழகத்தில் அமல்படுத்துவதில் என்ன சிக்கல் உள்ளது என்று திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார். மேலும் எல்லாவற்றையும் கூட்டணி, அரசியல் உடன் இணைத்து பார்க்க கூடாது என்றும் தெரிவித்தார்.

 
மதுவிலக்கு கோரிக்கையை தமிழகத்தை ஆளும் திமுக அரசு கனிவோடு பரிசீலிக்க வேண்டுமென்று திருமாவளவன் வலியுறுத்தி உள்ளார்.