வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 10 செப்டம்பர் 2024 (21:46 IST)

ஹரியானா தேர்தல்.! வினேஷ் போகத்தை எதிர்த்து முன்னாள் விமானி போட்டி.!!

Vinesh Phogat
ஹரியானா மாநிலம் ஜூலானாவில் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத்தை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் ஏர் இந்தியா விமானி கேப்டன் யோகேஷ் பைராகி போட்டியிடுகிறார்.  
 
ஹரியானாவில் உள்ள 90 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தியாவின் தலைசிறந்த மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகத்  ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.   
 
இந்நிலையில் ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி இரண்டாவது வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று (10.09.2024) வெளியிட்டது. அங்குள்ள ஜூலானாவில் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத்தை எதிர்த்து பாஜக சார்பில் முன்னாள் ஏர் இந்தியா விமானி கேப்டன் யோகேஷ் பைராகி போட்டியிடுகிறார்.

 
பிரதமர் நரேந்திர மோடி மீதான அபிமானம் மற்றும் வந்தே பாரத் திட்டத்தின் வெற்றி போன்றவைகளால் யோகேஷ் பாஜகவில் இணைந்தார். ஹரியானாவின் ஜிந்த் மாவட்டத்தின் சஃபிடனில் வசித்து வந்த யோகேஷ், தற்போது மாநில பாஜக இளைஞர் அணியின் துணைத் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.