வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : ஞாயிறு, 8 செப்டம்பர் 2024 (17:11 IST)

பிரச்சனைகளை சந்திப்பது வழக்கம்தான்.! நடிகர் விஜய்யின் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள்.! திருமாவளவன்..

Thiruma
விஜய்யின் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
 
புதுக்கோட்டையில் செய்தியாளரிடம் பேசிய அவர், அரசுப் பள்ளிகளில் சனாதன சக்திகளின் ஊடுருவல் அதிகரித்துள்ளது என்றார்.
 
தன்னம்பிக்கை ஊட்டும் பேச்சாளர் என்ற பெயரில் பலர் அரசு கல்வி நிறுவனங்களில் ஊடுருவி தம் கருத்துகளை திணித்து வருகின்றனர் என்றும் அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்தை பேசிய மகாவிஷ்ணுவின் கைது சரியானதுதான் என்றும் திருமாவளவன் கூறினார்.
 
பள்ளிகளில் இதுபோன்ற மூடநம்பிக்கைகளை வளர்க்கும் செயல்கள் இருக்கக் கூடாது அவர் கேட்டுக்கொண்டார். இப்பிரச்னைக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். 

மேலும் அனைத்துக் கட்சிகளுமே மாநாடு தொடங்கும்போது இதுபோன்ற பிரச்னைகளை சந்திப்பது வழக்கம்தான் என்று அவர் தெரிவித்தார். நடிகர் விஜய்யின் மாநாடு நடைபெறும் என்றும் மாநாடு வெற்றி பெற வாழ்த்துகள் என்றும் திருமாவளவன் குறிப்பிட்டார்.