”வேட்டி வேட்டி வேட்டி கட்டு”.. என தொண்டர்களை வலியுறுத்தும் பாஜக..
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினத்தை முன்னிட்டு பாஜவினரின் ஒற்றுமை யாத்திரை நடைபெறும் நிலையில், வேட்டி சட்டை அணிந்துவர அக்கட்சியின் பொதுசெயலாளர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
சமீபத்தில் மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்தித்த போது, பிரதமர் மோடி தமிழர் பண்பாடான வேட்டி, சட்டையோடு காட்சி தந்தார். இது தமிழர்களை வெகுவும் கவர்ந்தது.
இந்நிலையில் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளில் பாஜகவினர் தலைமையில் ஒற்றுமை யாத்திரை நடைபெற உள்ளது. தமிழர் பண்பாடு மற்றும் கலாச்சாரத்துக்கு பிரதமர் கொடுத்த முக்கியத்துவத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அந்த யாத்திரையில் கலந்துகொள்பவர்கள் வேட்டி, சட்டை மற்றும் துண்டோடு கலந்துகொள்ள அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் அறிவுறுத்தியுள்ளார்.
சீன அதிபரை சந்தித்தபோது பிரதமர் மோடி, மோடி ஆதரவாளர்கள் ஒரு பக்கம் தமிழர் பண்பாட்டுக்கு பிரதமர் முக்கியத்துவம் கொடுக்கிறார் என கூறி வந்தாலும் மறு பக்கம் “தமிழகத்தில் பாஜக காலூன்ற பார்க்கும் ஒரு அரசியல் நகர்வு” என விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.