திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: சனி, 21 செப்டம்பர் 2024 (15:56 IST)

தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது -நவாஸ் கனி எம்பி பேச்சு!

தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி மதுரை மேல் நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசியது......
 
தடையில்லா சான்றிதழை நாங்கள் நிறுத்த இருக்கிறோம் என்று சொன்னோம் அதற்கு ஒரு சிலர் வக்பு சொத்துக்களை பதிவு செய்வதற்கு இது வழி வகுத்து விடுமோ என்கிற சந்தேகத்தோடு ஒரு சிலர் என்னிடம் கேட்டார்கள்.
 
இந்த தடையில்லா சான்றுக்கும் வக்பு வாரிய சொத்துக்களுக்கும் சம்பந்தமில்லை. ஏற்கனவே தடையில்லா சான்று கொடுப்பது வக்பு சொத்து இல்லை, இதில் பதிவு செய்வதற்கு வக்புக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என்பதுதான்.
 
ப்ரோ பர்ஃபாமாவில் எங்களுக்கு இருந்த சொத்துக்களை எல்லாம் பதிவு செய்வதாக வந்த தகவலில் 1958 ல் நடைபெற்ற சர்வே அடிப்படையில் பர்பாமாவில் இருக்கக்கூடிய அத்தனை சொத்துக்களையும் வக்பு சொத்துக்களை ஜீரோ வேல்யூ ஆக்கி அதை பதிவு செய்யக்கூடாது என பத்திரப்பதிவுத்துறைக்கு வக்பு வாரியத்தின் சார்பாக அனுப்பப்பட்டது.
 
 அதில் ஒரு சில இடங்களில் பரப்பளவுகள் சரியாக கொடுக்கப்படாததால்,வக்புவாரிய இடம் போக உள் பிரிவில் வேறு சில இடங்கள் இருந்ததை பதிவு செய்ய முடியாததால் வக்பு வாரியத்தை அணுகினார்கள், எங்கள் ஆவணங்களை ஒப்பிட்டு சரிபார்த்து அதன் அடிப்படையில் எங்களுக்கு உரிய இடம் போக மற்ற இடங்களை கொடுப்பதில் எங்களுக்கு ஆட்சேபனம் இல்லை என தடையில்லா சான்று வழங்கினார்கள். 
 
இது பொதுமக்களுக்கு சிரமத்தை கொடுக்கும் என்பதால் அரசுக்கு வைத்த கோரிக்கையை ஒட்டி முப்பது பதிவு செய்யப்பட்ட சர்வேயர்களை வைத்து வக்பு நிலங்களை அளவிடும் அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
 
அப்போதே நாங்கள் முடிவு செய்து இருந்தோம் தற்போது நடைபெற்று வரும் வேலைகள் முடிந்து தடையில்லா சான்றுகள் கொடுக்கப்பட்ட பிறகு தடையில்லா சான்று கொடுக்க தேவையில்லை என்கிற நிலைப்பாட்டை எடுக்கலாம் என்று இருந்தோம்.
 
தடையில்லா சான்று வக்பு நிலத்திற்கு கொடுக்க முடியாது. வக்பு நிலம் இல்லாதவர்கள் எதற்காக எங்களை தேடி வந்து அந்த சான்றைப் பெற வேண்டும் அசௌகரியத்தை அடைய வேண்டும். எனவே வக்பு சொத்துக்களை மட்டும் சர்வே செய்து அதை ஜீரோ வேல்யூவாகி பத்திரம் செய்ய வேண்டுமே தவிர மற்றவர்களுக்கெல்லாம் அந்த தடையை நீக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். 
 
வக்பு சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பத்திரம் செய்வதற்கு வழிவகுத்து விடுமானால் நிச்சயமாக தமிழ்நாடு வக்பு வாரியம் அனுமதிக்காது. ஆக்கிரமிப்பில் உள்ள சொத்துக்களை மீட்பதற்கான பணிகளில் தீவிரம் காட்டுவோம்.
 
வக்பு சொத்துக்களை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து வளர்ச்சிக்காக பயன்படுத்துவோம். இதுவரை வக்பு சொத்தை விற்பதற்கு நாங்கள் தடையில்லா சான்று வழங்கவும் இல்லை, வழங்கவும் முடியாது. 
 
ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த கேள்விக்கு:
 
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அமைச்சரவையில் ஒப்புதல் கொடுத்து இருக்கிறார்கள் ஆனால் நிச்சயமாக சாத்தியம் இல்லை. ஐந்து மாநிலத்திற்கு கூட ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த முடியாத நிலையில், இவையெல்லாம் நடைமுறைக்கு சாத்தியமே இல்லை. 
 
தமிழக மீனவர்களை கைது செய்து சிறை தண்டனை மற்றும் அதிக அபராதம் விதிப்பது குறித்த கேள்விக்கு:
 
பாஜக ஆட்சிக்கு வந்த கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்வது அதிகமாகிவிட்டது. முன்பெல்லாம் கைது செய்தால் மீனவர்களை விடுவித்து படகுகளையும் கொடுத்து விடுவார்கள். ஆனால் தற்போது படகுகளை பறிமுதல் செய்து ஏலத்தில் விட்டு வருகிறார்கள். அது அவர்களின் வாழ்வாதாரம். 
 
கடந்த காலங்களில் அவர்களுக்கு சிறை தண்டனை கிடையாது. தற்போது நீதிமன்றங்களில் சிறை தண்டனை, அபராதம் விதிக்கிறார்கள் என்றால் இந்திய அரசு இதை கண்டிக்கவில்லை. நம்முடைய பிரதமர் மற்றும் வெளியுரவுத் துறை அமைச்சர் இலங்கை அரசை கண்டித்தால் நிச்சயம் இந்த கைது மற்றும் படகுகள் பறிமுதல் செய்வது தடுக்கப்படும்.
 
இந்தியா சொல்வதை கேட்காத நிலையில் அந்த அரசு இல்லை, ஆனால் இந்திய அரசு அவர்களை வலியுறுத்துவதில்லை. 
 
விசிக மது ஒழிப்பு மாநாடு குறித்த கேள்விக்கு:
 
எங்களுடைய கட்சியில் உள்ள மகளிர்களை அனுப்புவதற்கு கேட்டிருந்தார்கள். எங்களுடைய தேசிய மகளிர் அணி தலைவி தலைமையில் அக்டோபர் இரண்டாம் தேதி கள்ளக்குறிச்சியில் நடைபெற உள்ள மாநாட்டிற்கு அனுப்புவதாக சொல்லியுள்ளோம். மது ஒழிப்பு என்பது எங்களுடைய கொள்கையும் அதுதான். 
 
உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் குறித்த கேள்விக்கு:
 
எங்களுடைய விருப்பம் அவர் துணை முதல்வராக வேண்டும் என்று கூறினார்.