இன்று ஓணம் பண்டிகை, முகூர்த்த நாள் சேர்ந்து வந்த நிலையில் பூக்கள் விலை வேகமாக அதிகரித்துள்ளது.
இன்று ஓணம் பண்டிகை பல வீடுகளிலும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மறுபக்கம் ஆவணி இறுதியில் வரும் முகூர்த்த நாள் என்பதால் பல பகுதிகளிலும் திருமண சுபகாரியங்கள் விமர்சையாக நடந்து வருகிறது. இதனால் பூக்களுக்கு ஏக கிராக்கி எழுந்துள்ளது.
இதனால் தமிழகம் முழுவதும் பூ மார்க்கெட்டுகளில் பூக்கள் விலை உயர்வை சந்தித்துள்ளது. இன்றைய நிலவரப்படி மதுரை பூ மார்க்கெட்டில் இன்று காலை ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2500 வரை விற்பனையாகி, பின்னர் ரூ.1500 வரை குறைந்தது. முல்லைப்பூ ரூ.800க்கும், பிச்சி ரூ.600க்கும், சம்பங்கி ரூ.300, நாட்டு சம்பங்கி ரூ.500, பன்னீர் ரோஸ் ரூ.200, பட்டர் ரோஸ் ரூ.300 ஆகிய விலைகளில் விற்பனையாகி வருகிறது.
நாளை ஆவணி கடைசி முகூர்த்தம் என்பதால் நாளையும் பூக்கள் இதே விலையில் நீடிக்கும் என வியாபாரிகள் கூறியுள்ள நிலையில் பூக்களின் விலை உயர்வு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Edit by Prasanth.K