வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (09:02 IST)

2 சிறுவர்கள் கொடூர கொலை.. கடன் பிரச்சினையில் நண்பன் செய்த கொடூரம்? - குடியாத்தம் அருகே அதிர்ச்சி சம்பவம்!

crime

குடியாத்தம் பகுதியில் சிறுவர்கள் இருவர் கோவில் அருகே மர்மமான முறையில் கொல்லப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் யோகராஜ். இவரது மகன்கள் யோகித் (5), தர்ஷன் (4). யோகராஜின் நண்பர் கட்டிட ஒப்பந்ததாரரான வசந்த குமார். 

 

சமீபத்தில் யோகராஜின் மகன்களை கடைக்கு அழைத்து செல்வதாக கூறி வசந்தக்குமார் அழைத்து சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் சிறுவர்கள் வீடு திரும்பவில்லை. வசந்தக்குமாரையும் காணவில்லை. இதனால் அக்கம்பக்கத்தினர் அங்குள்ள அனைத்து பகுதிகளிலும் சிறுவர்களை தேடத் தொடங்கியுள்ளனர்.

 

அப்போது அப்பகுதியில் உள்ள கோவில் ஒன்றின் அருகே சிறுவர்கள் இருவரும் கொடூரமான முறையில் இறந்து கிடந்துள்ளனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் உடனடியாக போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளனர். சம்பவ இடம் விரைந்த போலீஸார் சிறுவர்கள் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், அவர்களை அழைத்து சென்ற வசந்தக்குமாரையும் தேடி கைது செய்தனர்.
 

 

வசந்தக்குமாரிடம் யோகராஜ் 14 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாகவும், அதை திரும்ப தருவதில் ஏற்பட்ட பிரச்சினையால் யோகராஜின் குழந்தைகளை வசந்தக்குமார் கொன்றதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K