சினிமா நடிகர்களால் துவங்கப்பட்ட கட்சிகளின் நிலை எப்படி இருக்கிறது - புதுச்சேரி முன்னாள் முதல்வர்!
உலகப் பிரசித்தி பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் புதுச்சேரியின் முன்னாள் முதல்வர்
நாராயணசாமி சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து சுவாமி தரிசனத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்.....
பிரதமர் மோடி அறிவித்த ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு வாரிய திருத்த சட்டம் உள்ளிட்ட 4 அறிவிப்புகளையும் நிறைவேற்ற முடியாமல் கூட்டணிக் கட்சியினரே ஆன சந்திரபாபு நாயுடு, நித்திஷ் குமார் ஆகியோர் எதிர்க்கின்றனர்.
தற்போது மோடி சொல்வதெல்லாம் நிறைவேற்ற முடியவில்லை. சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் கூட்டணியில் தொங்கு ஆட்சியாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக மோடி அரசு 5 ஆண்டுகள் நடைபெறாது. எனவே அவர் ராஜினாமா செய்து விட்டு போகலாம்.
தமிழ்நாட்டின் கல்வி கொள்கையை ஆளுநர் எதிர்ப்பது முறையில். 1000 ரவி வந்தாலும் தமிழ்நாடு மக்களை ஏமாற்ற முடியாது.
வெள்ள நிவாரண, வறட்சி நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு நிதியை தமிழ்நாட்டுக்கு கொடுக்காமல் மத்திய அரசு வஞ்சிக்கிறது.
நடிகர் விஜய் கட்சி துவங்கியுள்ளார். அதற்கு வாழ்த்துக்கள்,
கடந்த காலங்களில் சினிமா நடிகர்களால் துவங்கப்பட்ட கட்சிகளின் நிலை எப்படி இருக்கிறது என்று அனைவரும் அறிந்ததே.
விஜய் எந்த கட்சியுடன் கூட்டணிக்கு செல்வார் என்பது அவருக்கு தான் தெரியும்., அவரை காங்கிரஸ் கட்சியில் இணைக்க அழைப்பு விடுக்க அதிகாரம் எனக்கு இல்லை. அடிப்படையில் நான் ஒரு காங்கிரஸ் கட்சியின் தொண்டன் மட்டுமே என பேசினார்.