செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (15:06 IST)

தங்கு தடையின்றி மின்சாரம்..! தலைமை செயலாளர் ஆலோசனை.!!

Sheevdas Meena
கோடை காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா உத்தரவிட்டுள்ளார்.
 
கிராமப் பகுதிகளில் சீரான மின்சாரம் வழங்குவது தொடர்பாக தலைமைச்செயலாளர் மின்சாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். தமிழகத்தில் இரவு நேர மின் தேவை 19,000 மெகாவாட்டாக உள்ளதாக மின்சாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 
 
சென்னையில் மின்தேவை சராசரியாக 4,000 மெகாவாட்டாக உள்ளது. தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறன் 19,308 மெகாவாட்டாக உள்ளது. போதுமான அளவு மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும் விநியோகத்தில் ஏற்படும் சிக்கலால் மின்தடை ஏற்படுவதாகவும் இரவு 10 மணிக்கு மேல அதிகளவு மின்சார பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் மின் மாற்றிகளில் பிரச்சினை ஏற்படுகிறது என்று மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.


கோடை காலத்தில் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா கூட்டத்தில் உத்தரவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கூட்டத்தில் மின்சாரத்துறை மற்றும் என்எல்சி நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.