தொடர்புடைய செய்திகள்
- பரம்பரை சொத்து வரி முறை.!. இந்தியாவின் வளர்ச்சியை சிதைத்து விடும்..! நிர்மலா சீதாராமன்..!
- வெறுப்புக்கு எதிராக வாக்களித்துவிட்டேன்..! வாக்களித்த பின் நடிகர் பிரகாஷ்ராஜ் பேட்டி.!!
- மக்களவைத் தேர்தல்.! மணக்கோலத்தில் வாக்களித்த இளைஞர்..!!
- மக்களவைத் தேர்தல்..! கன்னூஜ் தொகுதியில் அகிலேஷ் யாதவ் போட்டி..!!
- சூடு பிடிக்கும் தேர்தல் களம்.! இன்றுடன் ஓய்கிறது 2-ஆம் கட்ட பரப்புரை..!
பிற்பகல் 1 மணி நிலவரம்..! 2ம் கட்ட வாக்குப்பதிவு..!!
பிற்பகல் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நடைபெற்று வரும் 13 மாநிலங்களில் திரிபுராவில் அதிகபட்சமாக 54.47% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் வெறும் 31.77% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
மக்களவைத் தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் 1 யூனியன் பிரதேசத்தில் இன்று நடைபெற்று வருகிறது.
அதன்படி, கேரளா - 20 , கர்நாடகா- 14, ராஜஸ்தான் - 13, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம் - தலா 8, மத்திய பிரதேசம் - 6,பிஹார், அசாம் - தலா 5, மேற்குவங்கம், சத்தீஸ்கர் - தலா 3, ஜம்மு-காஷ்மீர், திரிபுரா, மணிப்பூரில் தலா ஒரு தொகுதி என ஒட்டுமொத்தமாக 12 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பிற்பகல் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு நடைபெற்று வரும் 13 மாநிலங்களில் திரிபுராவில் அதிகபட்சமாக 54.47% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் வெறும் 31.77% சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.
அசாம் - 46.31%, பீகார் - 33.80%, சத்தீஸ்கர் - 53.09%, ஜம்மு & காஷ்மீர் - 42.88%, கர்நாடகா - 38.23%, கேரளா - 39.26%, மத்தியப் பிரதேசம் - 38.96%, மகாராஷ்டிரா - 31.77%, மணிப்பூர் - 54.26%, ராஜஸ்தான் - 40.39%, திரிபுரா - 54.47%, உத்தரப் பிரதேசம் - 35.73%, மேற்கு வங்கம் - 47.29% வாக்குகள் பதிவாகியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
