செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 10 ஜூன் 2025 (18:21 IST)

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!

ChatGPT திடீர் டவுன்.. கூகுள் ஜெமினியை நோக்கி செல்லும் பயனாளிகள்..!
கடந்த சில மணி நேரங்களாக ChatGPT திடீரென டவுன் ஆன நிலையில் கூகுள் ஜெமினியை நோக்கி பயனர்கள் சென்று கொண்டிருப்பதாகக் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்தியா உள்பட சில நாடுகளில் ChatGPT சேவையை அணுக முடியாமல் பல பயனாளிகள் தவித்ததாகவும், மாலை 3 மணி முதல் ChatGPT டவுன் ஆக தொடங்கியதாக ஆன்லைனில் புகார்கள் குவிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன. 
 
850க்கும் மேற்பட்ட புகார்கள் 'டவுன் டிடெக்டர்' (Downdetector) கண்காணிப்பு வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
ChatGPT டவுன் குறித்து OpenAI நிறுவனம் எந்த விளக்கத்தையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால், அதே நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாகத்தான் இந்த டவுன் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில், ChatGPT டவுன் என்ற தகவல் கிடைத்தவுடன் பயனாளிகள் கூகுள் ஜெமினியை நோக்கி செல்வதாகவும், கூகுள் ஜெமினி தற்போது மேம்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதால் மிக அபாரமாக செயல்படுவதாக பயனர்கள் கருத்து தெரிவித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran