வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

மெஹா ஏலத்தில் அதிக வீரர்களை தக்கவைக்க அணிகளுக்கு உரிமை.. பிசிசிஐ ஆலோசனை!

17 ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதுவரை ஒவ்வொரு அணியும் தலா 4 போட்டிகளை விளையாடியுள்ளன. ராஜஸ்தான், கொல்கத்தா, சென்னை, லக்னோ ஆகிய நான்கு அணிகள் முன்னணியில் உள்ளன.

அடுத்த ஆண்டு ஐபிஎல் சீசனின் போது மெகா ஏலம் நடக்க உள்ளது. இதற்காக அணிகள் நான்கு வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொள்ள முடியும். ஆனால் இந்த முறை அதிக வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அணிகள் பிசிசிஐ- யிடம் கோரிக்கை வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக ஒவ்வொரு அணியும் 8 வீரர்களை தக்கவைத்துக் கொள்வது சம்மந்தமாக பிசிசிஐ தற்போது ஆலோசித்து வருவதாக சொல்லப்படுகிறது.