திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 26 ஏப்ரல் 2024 (12:25 IST)

கோடை காலத்தில் சீரான மின் விநியோகம்.. தலைமை செயலாளர் முக்கிய ஆலோசனை..!

கோடை காலத்தில் சீரான மின் விநியோகம் வழங்குவது தொடர்பாக மின்சார துறை அதிகாரிகளுடன் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா முக்கிய ஆலோசனை செய்து வருகிறார்.

தமிழகத்தில் இரவு நேர மின் தேவை 19,000 மெகாவாட்டாக உள்ளதாக மின்சாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் மின் தேவை சராசரியாக 4,000 மெகாவாட்டாக உள்ளது என்றும், தமிழ்நாட்டின் மொத்த மின் உற்பத்தி திறன் 19,308 மெகாவாட் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் போதுமான அளவு மின் உற்பத்தி செய்யப்படுவதாகவும், விநியோகத்தில் ஏற்படும் சிக்கலால் மின் தடை ஏற்படுவதாகவும் மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும்  தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மின்வாரிய துறை அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனையில் இரவு 10 மணிக்கு மேல், அதிகளவு மின்சாதன பொருட்கள் பயன்படுத்தப்படுவதால் மின் மாற்றிகளில் பிரச்சினை ஏற்படலாம் என்றும் மின்வாரியம் தெரிவித்துள்ளது

Edited by Siva