வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (17:50 IST)

குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது எப்படி.? மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை..!

Water Issue
தடையில்லாமல் குடிநீர் வழங்க, கோடைகால குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க 12 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா காணொலியில் ஆலோசனை மேற்கொண்டார். 
 
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் வெப்ப அலை வீசி வருகிறது. ஏப்ரல் மாதம் தொடங்கியதில் இருந்து வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்தது. வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரிக்கும் என்பதால் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும், அதிகளவில் தண்ணீர் பருகுமாறும் அறிவுறுத்தப்பட்டனர்.
 
இந்நிலையில் தடையில்லாமல், குடிநீர் வழங்குவது மற்றும், கோடைகால குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது குறித்து, தலைமை செயலாளர், சிவதாஸ் மீனா, மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


தலைமை செயலகத்திலிருந்து, காணொளி காட்சி மூலம் 12 மாவட்ட ஆட்சியர்களுடன் இந்த ஆலோசனையானது நடைபெற்றது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சீராக குடிநீர் வழங்குவது தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.