1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. New Low-Pressure Area Expected in Bay of Bengal, Bringing More Rain to Tamil Nadu and Chennai

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு.. தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!

storm
வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 
 
தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் வாரத்தில் வழக்கமாக தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு மே மாதமே தொடங்கிவிட்ட நிலையில் கேரளா மற்றும்  தமிழகத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
 
கடந்த சில தினங்களாக மாலை நேரத்தில் சென்னையில் மழை பெய்து வரும் நிலையில், வங்கக் கடலில் ஜூன் 13ஆம் தேதி அல்லது 12ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். 
இதன் காரணமாக 12ஆம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்றும், 13 ஆம் தேதி சென்னையில் மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இந்த வாரம் முழுவதும் சென்னை உள்பட தமிழகத்தில் நல்ல மழை பெய்யும் என்று கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
ஆதார் அட்டையை புதுப்பிக்க கடைசி வாய்ப்பு.. இன்னும் 4 நாட்கள் தான்..!