தவறு... மீண்டும் நடக்காது; மன்னிப்பு கோரிய உதயநிதி: காரணம் என்ன?
சமீபத்தில் சென்னை வானகரத்தில் திமுக தலைவர் ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அவரை வரவேற்று சாலை நெடுக்கிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது.
அந்த பேனரில் இளவரசர் வருகிறார்.. எங்களின் இளவரசரே என்றெல்லாம் விதவிதமான வாசகங்களோடு வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், இதனை புகைப்படம் எடுத்து ஒரு உதயநிதியை குறிப்பிட்டு பதிவு ஒன்றை போட்டிருந்தார்.
அந்த பதிவு பின்வருமாறு, எதிர்க்கட்சி 100 பேனர் வைக்கிறார்கள் என்று ஆளும் கட்சியிடம் புகார் கொடுத்தால் அவர்கள் 1000 பேனர் வைப்பவர்களாக இருக்கிறார்கள். ஒரு சாதாரண பேனர் விதிமுறைகளை கூட மதிக்க தெரியாத ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியை கொண்டது தான் நமது தமிழகம் என ட்வீட் செய்திருந்தார்.
இதற்கு உதயநிதி, தவறு.. மீண்டும் நடக்காது! என பதிவிட்டார். இதற்கு திமுகவை சேர்ந்த பலர் வரவேற்பு தெரிவித்திருந்தாலும், உதயநிதி மன்னிப்பு கேட்பது இது முதல் முறையல்ல.
ஒரு முறை திமுக பொதுக் குழு உறுப்பினர் கூட்டத்தின் போது, அங்கு வைக்கப்பட்டிருந்த பேனரில் உதயநிதியின் படம் இடம் பெற்றிருந்தது. அப்போது முன்னணி தலைவர்கள் மேடைல உங்க போட்டோ இடம் பெற உங்க தகுதி என்ன? என கேட்டிருந்தபோது தவறு... மீண்டும் நடக்காது என குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.