திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 27 நவம்பர் 2024 (07:45 IST)

தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை.. வானிலை எச்சரிக்கை..!

Rain
தமிழ்நாட்டில் இன்று 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
வங்கக்கடலில் உருவாகியுள்ள புயலின் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று ஏற்கனவே சென்னை வானிலை ஆய்வு மையம், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
 
இந்த நிலையில், இன்று தமிழ்நாட்டின் 25 மாவட்டங்களில், அதாவது,
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, இராமநாதபுரம், நீலகிரி, கோவை, கள்ளக்குறிச்சி, திருச்சிராப்பள்ளி, தென்காசி, விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்யும்.
 
இதுதவிர, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, மேற்கண்ட மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
 
Edited by Siva