திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 26 நவம்பர் 2024 (19:59 IST)

ஐதராபாத் தெருவில் திடீரென ஓடிய ரத்த ஆறு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

ஐதராபாத்தில் உள்ள தெரு முழுவதும் திடீரென இரத்த ஆறு ஓடியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அதிகாரிகள் அது ரத்தம் இல்லை என்றும், தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட சிவப்பு நிற ரசாயனம் என்றும் மக்களுக்கு விளக்கிக் கூறிய நிலையில், பொதுமக்கள் நிம்மதி அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள வெங்கடாச்சாரி நகர் பகுதியில், தெரு முழுவதும் திடீரென ரத்த நிறத்தில் திரவம் ஓடியது. இதனால், பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அந்த திரவத்தை சோதனை செய்த அதிகாரிகள், அது தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்பட்ட சிவப்பு நிற ரசாயனம் என்று விளக்கம் அளித்தனர். இதனை அடுத்து, இந்த ரசாயன கழிவுகளால் உடல் நலம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் அளித்தனர்.

சம்பந்தப்பட்ட ஆலைக்கு அதிகாரிகள் சென்று ஆய்வு செய்து வருகின்றனர். தொழிற்சாலைகள் ரசாயன கழிவுகள் வெளியேற்றப்படுவதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.



Edited by Siva