செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 26 நவம்பர் 2024 (20:03 IST)

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?

மோடி, அமித்ஷாவை மனைவியுடன் சென்று சந்தித்த ஹேமந்த் சோரன்... என்ன காரணம்?
ஜார்கண்ட் மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஜே.எம்.எம். கட்சி வெற்றி அடைந்துள்ளது. 54 இடங்களில் அக்கட்சி வெற்றி பெற்ற நிலையில், மாநிலத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

இந்த நிலையில் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்பு விழா வரும் நவம்பர் 28-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஹேமந்த் சோரன் மற்றும் அவரது மனைவி கல்பனா சோரன் ஆகிய இருவரும் தலைநகர் டெல்லி சென்று பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து, இருவரையும் பதவியேற்பு விழாவிற்கு வருமாறு அழைப்பு கொடுத்துள்ளனர். இருவரும் விழாவில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர்களை ஹேமந்த் சோரன் மற்றும் கல்பனா சோரன் நேரில் சந்தித்து, பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Edited by Siva