இத்தன தொகுதில ஜெய்க்கனும், இல்லனா ஆட்சிக்கு ஆப்புதான்: டார்கெட் ஃபிக்ஸ் பண்ண அதிமுக!

Last Modified சனி, 3 நவம்பர் 2018 (12:48 IST)
18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பு அதிமுகவிற்கு சதகமாக வந்த நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட அனைத்து கட்சிகளும் தயார் என கூறியுள்ளதால் 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தற்போது தமிழக அரசியலை சூடுபிடிக்க செய்துள்ளது. 
 
இதனால், ஏற்கனவே காலியான 20 தொகுதிகளுக்கு பொறுப்பாளர்களை நியமித்தது அதிமுக அரசு. இந்நிலையில் இன்று நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி,  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். 
 
இந்த ஆலோசனையின் போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த இடைத்தேர்தலின் போது அதிமுக 20 தொகுதிகளில் அதிக அளவு எண்ணிக்கையில் தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 
 
அதோடு, நிச்சயம் 8 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் அப்படி இல்லை என்றால் ஆட்சிக்கு ஆபத்துதான் என கூறியுள்ளார். அதிகபட்ச தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என அதிமுக எண்ணினாலும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள நிச்சயம் 8 தொகுதிகளில் கட்டாய வெற்றி பெற வேண்டும். 


இதில் மேலும் படிக்கவும் :