1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 2 நவம்பர் 2018 (17:59 IST)

டெங்கு தலைவர்: ஸ்டாலினை வாரி விட்ட முரசொலி!

திமுக கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான முரசொலியின் வால்பேப்பரில் டெங்கு தலைவர் ஸ்டாலின் என எழுதப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. 
 
டெங்குக் காய்ச்சல் பரவுவதும், பல உயிர்களை காவு வாங்குவதும் வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. குறிப்பாக தமிழ்நாட்டில் பல இடங்களில் பரவி, பலர் உயிரிழந்து நடுங்க வைத்துக் கொண்டிருக்கிறது டெங்கு காய்ச்சல். 
 
இந்நிலையில், திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட டெங்கு குறித்து நடவடிக்கை எடுக்காத அதிமுக அரசை கண்டிப்பதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இந்த அறிக்கை குறித்து முரசொலியில் செய்தி வெளியானது.
 
அதில் முரசொலியின் வால்பேப்பரில் டெங்கு தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை: கழக செய்திகள் என் அச்சிடப்பட்டுள்ளது. உண்மையில் அப்படித்தான் அச்சிடப்பட்டதா? அல்லது சில விஷமிகளின் எடிட்டிங் வேலையா என்பது தெரியவில்லை. 
 
ஆனால், இந்த புகைப்படம் அதிக அளவில் சமூக வலைத்தளங்கலீல் உலா வருகிறது. இந்த புகைப்படத்தோடு சேர்த்து துரமுருகன் புகைப்படமும் இணைக்கப்பட்டு வெளியாகியுள்ள போட்டோவும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.