வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 மே 2022 (10:30 IST)

குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 

 
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ மற்றும் குரூப் 2 தேர்வு நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை 1.83 லட்சம் பேர் எழுத வில்லை என்ற தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்தது. நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வை 11 லட்சத்திற்கும் அதிகமானோர் எழுத இருந்தனர். ஆனால் 1.83 லட்சம் பேர் இந்த தேர்வை எழுத வரவில்லை என்று டிஎன்பிசி தெரிவித்தது. 
 
இது குறித்து ஒரு ஆய்வு செய்து அடுத்த டிஎன்பிசி தேர்வை விண்ணப்பித்த அனைவரையும் எழுதவைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்தது. 5 நாட்களில் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி சார்பில் அறிவிக்கப்பட்டது.
 
அதன்படி டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2 ஏ தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு இணையதளத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியான விடைக்குறிப்பின் மீது ஆட்சேபனைகள் இருந்தால் ஒரு வாரத்திற்குள் பதிவு செய்யலாம் எனவும்  கூறப்பட்டுள்ளது. மேலும், ஜூன் மாத இறுதியில் முடிவுகள் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.