Daily Horoscope
✕

விஜயை நான் அப்படி பேசியிருக்கக் கூடாது!.. திருமாவளவன் ஓப்பன்...

Updated: வெள்ளி, 2 அக்டோபர் 2026 (12:27 IST)
கடந்த 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் ‘விஜயும், எடப்பாடி பழனிச்சாமியும் ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளைகள்’ எனக் கூறியிருந்தார்.

தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருக்கிறது. ஆட்சியமைக்க  மேலும் 10 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தேவைப்பட்டபோது திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைக் கட்சி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தன.

இதையடுத்து,  அந்த கட்சிகளுக்கு அமைச்சர் பதவியும் விஜய் கொடுத்திருக்கிறார். விசிக எம்.எல்.ஏ வன்னியரசுக்கு அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. தற்போது தவெக கூட்டணியில் விசிக இருக்கிறது. ஆனாலும் அவ்வப்போது திமுகவுக்கு ஆதரவாகவும் திருமா பேசிவருகிறார்..

இந்நிலையில் நேற்று நடந்த ஒரு கூட்டத்தில் பேசிய திருமாவளவன் ‘தேர்தல் பிரச்சாரத்தில் ஆர்.எஸ்.எஸ், பாஜகவுடன் விஜயை இணைத்து நான் பேசியது தவறு என உணர்ந்திருக்கிறேன்.. பாஜகவின் அச்சுறுத்தலையும் மீறி காங்கிரஸுடன் கூட்டணி என்று முதல்வர் விஜய் நடித்த முடிவால் அவரின் கூட்டணியில் இணைந்தோம்’ எனவும் கூறியிருக்கிறார்.
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

சிக்மா படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த சங்கீதா விஜய்.. மகளுடன் பார்த்து ரசித்தார்..

வெற்றி பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்.. கண்டக்டராக மாறி டிக்கெட் கொடுத்த நிகழ்வு..

இந்தியாவில் அறிமுகமானது Apple Pay.. யுபிஐ பரிவர்த்தனையை மீறி எடுபடுமா?

திரிணாமுல் காங்கிரசை காங்கிரஸ் உடன் இணைக்க வேண்டும்.. மம்தா பானர்ஜி ஏற்பாரா?

விமானிக்கு கத்திக்குத்து விவகாரம்!.. Fly Dubai விமான சேவை ரத்து!.. தீவிரமடையும் விசாரணை!.

அடுத்த கட்டுரையில்
Show comments