Daily Horoscope
✕

ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்சன்!.. விஜய் பிரச்சாரத்தை கலாய்க்கும் பிரேமலதா!...

Updated: வெள்ளி, 2 அக்டோபர் 2026 (12:16 IST)
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சரானதிலிருந்தே அவர் நடிகரைப் போலவே செயல்படுகிறார். சினிமாவில் பேசியது போலவே சட்டசபையில் பன்ச் வசனம் பேசுகிறார்.. ஆக்சன் செய்கிறார்.. சபாநாயகன் ஆக்சன் சொல்கிறார்... விஜய் பர்பார்ம் பண்ணுகிறார். முதல்வர் விஜயின் உடல் மொழி நடிகரை போலவே இருக்கிறது.. அவர் இன்னும் முதலமைச்சராக மாறவில்லை.. சட்டசபையில் தவெக எம்.எல்.ஏக்கள் பாட்டு பாடுகிறார்கள்.. இன்னும் டேன்ஸ் மட்டும்தான் ஆடவில்லை’ என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தொடர்ந்து நக்கலடித்து வருகிறார்.

சமீபத்தில் தாராபுரம் தொகுதியில் முதல்வர் ஜோசப் விஜய் பிரச்சாரம் செய்த போது அவருக்கு முன் பேசிய அந்த தொகுதி தவிர்க்க வேட்பாளர் சத்யபாமா தன்னை பெண் என்றும் பாராமல் திமுகவினர் அவதூறாக பேசுவதாக மேடையிலேயே தண்ணீர் விட்டு அழுதார். அருகிலிருந்து முதல்வர் விஜய் அவருக்கு ஆறுதல் சொன்னார்..

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொதுச்செயலாளர் பிரேமலதா ‘மேடையில் நடந்த நாடகத்தை எல்லோரும் பார்த்தார்கள்.. நாமும் பெண்தான்.. அவரும் பெண்தான்.. அனைத்து பெண்களையும் மதிக்க வேண்டும்.. தரக்குறைவாக பேசக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.. ஆனால், அமைச்சர் ராஜ்மோகன் சத்யபாமா காதில் ஏதோ சொன்னதும் ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்சன் என சினிமாவைப் போல நாடகத்தை நடத்திவிட்டனர்’ என அவர் பேசியிருக்கிறார்..

இது தொடர்பாக விளக்கமளித்த அமைச்சர் ராஜ்மோகன் ‘முதல்வரும், மக்களும் நீண்ட நேரம் காத்திருப்பதால் சுருக்கமாக பேச முடியுங்கள் என்றுதான் நான் சத்யபாமா காதில் சொன்னேன்.. இது தெரியாமல் ஒரு பெண்ணின் கண்ணீரை கூட எதிர்க்கட்சிகள் அவதூறாக பேசுகிறார்கள்’ எனவும் கூறியிருக்கிறார்.<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

சிக்மா படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்த சங்கீதா விஜய்.. மகளுடன் பார்த்து ரசித்தார்..

வெற்றி பயணம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்.. கண்டக்டராக மாறி டிக்கெட் கொடுத்த நிகழ்வு..

இந்தியாவில் அறிமுகமானது Apple Pay.. யுபிஐ பரிவர்த்தனையை மீறி எடுபடுமா?

திரிணாமுல் காங்கிரசை காங்கிரஸ் உடன் இணைக்க வேண்டும்.. மம்தா பானர்ஜி ஏற்பாரா?

விமானிக்கு கத்திக்குத்து விவகாரம்!.. Fly Dubai விமான சேவை ரத்து!.. தீவிரமடையும் விசாரணை!.

அடுத்த கட்டுரையில்
Show comments