1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. tasmac closed on feb 5 at chennai

சென்னையில் பிப்ரவரி 5-ம் தேதி 'டாஸ்மாக்' கடைகள் மூட கலெக்டர் உத்தரவு!

tasmac
சென்னையில் பிப்ரவரி 5ஆம் தேதி டாஸ்மாக் கடைகளை மூட சென்னை மாவட்ட கலெக்டர் சற்றுமுன் உத்தரவிட்டு உள்ளார். 
 
வடலூர் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் கீழ் சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் அனைத்து விதமான பார்களூம் வரும் ஐந்தாம் தேதி கண்டிப்பாக மூடவேண்டும் என்றும் அன்றைய தினம் அது விற்பனை செய்யக்கூடாது என்றும் சென்னை மாவட்ட கலெக்டர் அமிர்தஜோதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளத்.
 
தடையை மீறி மதுபானங்கள் விற்றால் விதிமுறைகளின் கீழ் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். பிப்ரவரி 5ஆம் தேதி தைப்பூச திருவிழா என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
நாடாளுமன்றத்தில் போராடிய எம்பிக்கள் - பட்ஜெட்டால் எவற்றின் விலை உயரும்?