திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2023 (17:26 IST)

பிப்ரவரி 2023 மாத ஜோதிடப் பலன்கள்: தனுசு

பிப்ரவரி 2023 மாத ஜோதிடப் பலன்கள்: தனுசு


கிரகநிலை:
ராசியில் புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், சனி  - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன், செவ்வாய்  - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலை இருக்கிறது.

கிரகமாற்றம்:
04-02-2023அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
13-02-2023 அன்று சூரிய பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய,  வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
16-02-2023 அன்று சுக்ர பகவான் தைரிய,  வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
21-02-2023அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய,  வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 

பலன்:
எந்த சூழ்நிலையிலும் மனம் தளராது விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் பெற்ற  தனுசு ராசி அன்பர்களே, இந்த மாதம் நீண்ட நாட்களாக முயற்சி செய்த காரியங்கள் வெற்றியை தரும். வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். திடீர் செலவு ஏற்படும். சிலருக்கு மருத்துவ செலவு ஏற்படும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும்.

தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன் விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் தொடர்பான காரியங்கள் தாமதமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயந்து வேலை செய்ய வேண்டி இருக்கும். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் உழைப்பிற்கான அங்கீகாரம் இல்லாமல் போகலாம்.

குடும்பத்தில் உறவினருடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம். வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. சொத்து விவகாரங்களில் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையில் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனில் கவனம் செலுத்துவீர்கள். உறவினர்கள் - நண்பர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.
பெண்களுக்கு எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த காரிய வெற்றி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடுகள் நடக்கும்.

கலைத்துறையினருக்கு நல்ல லாபம் கிடைக்கும். அலைச்சல் இருக்கும். ஆனால் கடந்த காலத்தை விட கூடுதல் வருவாயைப் பெறலாம். புதிய ஒப்பந்தம் தொடங்குவதற்கு முன் ஒன்றுக்கு மேற்பட்டவர்களிடம் ஆலோசனை செய்யவும்.

அரசியலில் உள்ளவர்களுக்கு நற்பெயர் எடுப்பத்ற்குண்டான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த பதவிகள் வந்து சேரும். நல்ல நிலைக்கு உயர்த்தப்படுவீர்.

மாணவர்களுக்கு கல்விக்கான பணிகளில் தாமதம் உண்டாகும். உழைப்பு அதிகரிக்கும்.

மூலம்:
இந்த மாதம்  தொழில் வியாபார போட்டிகள் குறையும். பணவரத்து இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின்போது கவனம் தேவை.

பூராடம்:
இந்த மாதம்  அடுத்தவர்களுக்காக பொறுப்புகளை ஏற்கும்போது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது. பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை.

உத்திராடம் 1ம் பாதம்:
இந்த மாதம்  வீண் அலைச்சலை குறைத்துக்கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள்.

பரிகாரம்: பெருமாளை தீபம் ஏற்றி வணங்க எதிர் பார்த்த காரிய அனுகூலம் கிடைக்கும்.  உத்தியோகம் தொடர்பான பிரச்சனை தீரும்.
சந்திராஷ்டம தினங்கள்: 4, 5, 31
அதிர்ஷ்ட தினங்கள்: 24, 25