சர்வதேச அளவில் ஆஸ்திரியா நாட்டில் நடைபெற்ற கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம்வென்ற தமிழக வீரர்கள்!
அண்மையில் புனேவில் நடைபெற்ற ஆசிய கோ ஜூரியோ கராத்தே போட்டியில் கலந்து கோவையை சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் சர்வதேச போட்டிகளுக்கு தேர்வாகினர்
இந்நிலையில் 7 வது உலக கோஜிரியோ கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி ஐரோப்பா நாடான ஆஸ்திரிய நாட்டில் கடந்த 4- ஆம் தேதி நடைபெற்றது.
உலகம் முழுவதும் சுமார் 26 நாடுகளில் இருந்தும் 1200 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் இந்திய அணி சார்பாக கோவையை சேர்ந்த ஆறு பேர் கலந்து கொண்டனர்.
கட்டா,குமித்தே,குழு என வயது மற்றும் எடை பிரிவுகளில் நடைபெற்ற போட்டிகளில் கோவையை சேர்ந்த மஹா கவுரி,என்ற மாணவி உட்பட கைலாஷ்,சுனில், தர்னீஷ்,
நந்தகுமார்,
ஆகாஷ் ஆறு பேரும்
அந்தந்த போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களைப் பெற்று அசத்தியுள்ளனர்.
இதே போல கோவையில் இருந்து சென்ற ஷிஹான் பிரமோஷ் மற்றும் பார்த்திபன் ஆகியோர் ஆஸ்திரியாவில் நடத்தப்பட்ட உலக கோஜூரியோ கராத்தே கூட்டமைப்பு நடுவர் தேர்வில் வெற்றிபெற்று, உலக அதிகாரிகளாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்,
இந்நிலையில் உலக அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்று கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகள் மற்றும் உடன் சென்ற அதிகாரிகளுக்கு கோவை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதில் பல்வேறு அரசியல் கட்சியினர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு தமிழகத்திற்கு பெருமை சேர்ந்த வீரர்,வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.