1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated : வியாழன், 12 செப்டம்பர் 2024 (10:13 IST)

பாரதியாரின் நினைவு தினம்! பாராதியாரின் திருவுருவ சிலைக்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்த சீமான்!

பாரதியாரின் 103 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பாரதியார் தமிழ் ஆசிரியராக பணிபுரிந்த பள்ளியான மதுரை சிம்மக்கல் சேதுபதி மேல்நிலைப் பள்ளியில்
உள்ள பாரதியாரின்  திருவுருவசிலைக்கு பல்வேறு தரப்பினர் மற்றும் மாணாக்கர்கள் என ஏராளமானோர் மலர்தூவி புகழ் அஞ்சலி செய்தனர்.
 
இந்நிலையில் பரமக்குடியில் இம்மானுவேல் சேகரன் நினைவிடத்தில் மரியாதை செலுத்திவிட்டு மதுரை வந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மதுரை சிம்மக்கல்லில் உள்ள சேதுபதி பள்ளியில் பாரதியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
 
சீமானுடன் இணைந்து சாட்டை துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளும் இணைந்து பாரதியாரின் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் சாட்டை துரைமுருகன் பாரதியாரின் புகழை முன்மொழிய சீமான் மற்றும் நாம் தமிழர் நிர்வாகிகள் கோஷங்களை எழுப்பி மரியாதை செலுத்தினார்.
 
பின்னர் அங்கு இருந்த வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு சீமான் புறப்பட்டு சென்றார்.