ஞாயிறு, 8 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 9 நவம்பர் 2024 (16:50 IST)

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

TVK Flag
திருப்பூரில் உள்ள ஆடை தயாரிக்கும் நிறுவனங்களில் தமிழக வெற்றி கழகத்தின் கொடிகள் மற்றும் துண்டுகள் தயாரிக்கும் ஆர்டர்கள் குவிந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில், சமீபத்தில் இந்த கட்சியின் முதல் மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெற்றது என்பது தெரிந்தது.

இந்த நிலையில், தமிழக அரசியலில் இந்த கட்சி ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படும் நிலையில், திருப்பூரில் உள்ள ஆடை தயாரிக்கும் நிறுவனங்களில் தமிழக வெற்றி கழகத்தின் கொடிகள் மற்றும் துண்டுகள் தயாரிக்கும் ஆர்டர்கள் குவிந்து வருவதாகவும், இதனால் நிறுவனங்களுக்கு ஏராளமான லாபம் கிடைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜயகாந்த் தேசிய திராவிடம் முற்போக்கு கழகம் என்ற கட்சியை தொடங்கிய போது இதே போன்று அதிகமாக ஆர்டர்கள் கிடைத்ததாகவும், அதன் பின்னர் தற்போது தான் ஒரு புதிய அரசியல் கட்சியின் ஆர்டர்கள் கிடைத்து வருவதாகவும் அங்குள்ள ஆடை தயாரிப்பு நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர். இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


Edited by Mahendran