வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 30 செப்டம்பர் 2023 (21:01 IST)

#AsianGames2023: இந்திய ஆடவர் பேட்மிண்டன் இறுதிப் போட்டிக்கு தகுதி

19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி முதல் சீனாவில் ஹாங்சோ நகரில் நடந்து வருகிறது. இப்போட்டியில் இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட  நாடுகள் பங்கேற்றுள்ளன.
19 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் கடந்த 24 ஆம் தேதி முதல் சீனாவில் ஹாங்சோ நகரில் நடந்து வருகிறது. இப்போட்டியில் இந்தியா, சீனா, இலங்கை உள்ளிட்ட  நாடுகள் பங்கேற்றுள்ளன.

இப்போட்டிகள் வரும் அக்டோபர் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஏற்கனவே, இந்திய வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்து பல போட்டிகளில் தங்கம்., வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று வருகின்றனர்.

இந்த நிலையில், ‘’சீனாவின் ஹாங்சூ நகரில் நடைபெற்று வரும் #AsianGames2023- ல்  இன்று நடைபெற்ற பரபரப்பான அரையிறுதி போட்டியில்  தென்கொரியா – இந்தியா அணிகள் விளையாடின.

இந்த போட்டியில், இந்திய ஆடவர் பேட்மிண்டன் அணி ஆசிய போட்டிகள் வரலாற்றில் முதல்முறையாக ஆடவர் பேட்மிண்ட்ன் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.