இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!
இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக சென்னை உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அதுமட்டுமின்றி, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் நாளை உருவாக இருப்பதாகவும், இந்த தாழ்வு மையம் தமிழக மற்றும் இலங்கை கடலோர பகுதியில் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதனால் இன்னும் ஒரு வாரத்திற்கு மழை நீடிக்கும் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில், இன்று மாலை மற்றும் இரவு நேரத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எனவே, மேற்கண்ட 11 மாவட்டங்களில் உள்ள பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Edited by Mahendran