ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 12 செப்டம்பர் 2024 (10:33 IST)

ஜாமீன் வழங்கிய பிறகும் வெளியே விடாமல் வைத்திருப்பது சட்டவிரோதம்.. ஜாபர் சாதிக் மனுதாக்கல்..!

சட்ட விரோத பண பரிமாற்ற தடை வழக்கில் ஜாமீன் வழங்கிய பின்னும் தன்னை சிறையில் அடைத்தது சட்டவிரோதம் என்று கூறி ஜாபர் சாதிக் மனுதாக்கல் செய்த நிலையில் அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

போதை பொருள் கடத்தல் வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட திகார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அவரை அமலாக்கத்துறை அதிகாரிகளும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் அமலாக்கத்துறை தன்னை சிறையில் வைத்தது சட்டவிரோதம் என்றும் எனவே விடுவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்த போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் ஜாபர் சாதிக் மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார். இது தொடர்பாக திகார் சிறைத்துறை நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்து மனுதாரர் நிவாரணம் தேடிக் கொள்ளலாம் என்றும் அவர் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Edited by Mahendran