அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!
தெலுங்கானா மாநிலத்தில் டிரம்ப் அவர்களுக்கு ஏற்கனவே கோவில் கட்டப்பட்டதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து அந்த கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டதாகவும், ஏராளமான மக்கள் அந்த கோவிலுக்கு வந்து வழிபட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
சமீபத்தில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் 47வது அமெரிக்க அதிபராக விரைவில் பதவி ஏற்க உள்ளார்.
இந்த நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஜங்கான் என்ற மாவட்டத்தில் டொனால்ட் ட்ரம்புக்கு கோவில் கட்டப்பட்டுள்ள நிலையில், அந்த கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. அவரது சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்யப்பட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டு இந்த கோவில் அமைக்கப்பட்ட நிலையில், அப்போதே ரூபாய் 2 லட்சம் வரை செலவு செய்து கிருஷ்ணா என்பவர் இந்த கோவிலை கட்டியதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், தற்போது ட்ரம்ப் வெற்றியை கொண்டாடும் வகையில் இந்த கோவிலை கட்டிய கிருஷ்ணா என்பவரின் உறவினர்கள் இந்த கோவிலை சுத்தம் செய்து சிறப்பு வழிபாடு நடத்தியதாகவும், சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளன.
Edited by Mahendran