1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 6 பிப்ரவரி 2018 (16:30 IST)

தேசிய அளவிலான கபாடி போட்டி - வீரர்களை வழியனுப்பும் விழா(வீடியோ)

ஜெய்ப்பூரில் நடைபெறும் தேசிய அளவிலான கபாடி போட்டிக்கு தமிழக வீரர்கள் தேர்வினையொட்டி 6 நாள் பயிற்சி கொடுக்கப்பட்ட பின்பு ஜெய்ப்பூருக்கு வழி அனுப்பும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

 
ஜெய்ப்பூரில் இந்த மாதம்  8 ம் தேதி நடைபெற உள்ள தேசிய அளவிலான கபாடி போட்டிகளில், (எடை 84 பிரிவில்) தமிழ்நாடு மாநிலம் சார்பில் 14 கபாடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டதோடு, அந்த வீரர்களுக்கு ஒரு வாரகாலம் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் அந்த வீரர்களை ஜெய்ப்பூருக்கு அனுப்பும் நிகழ்ச்சி கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்றது. 
 
எவர்கிரீன் பவுண்டேஷன் தலைவரும், மூத்த பத்திரிக்கையாளருமான எம்.ஏ.ஸ்காட் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், நியூ மாவட்ட கபாடி கழக சேர்மன் அண்ணாத்துரை அனைவரையும் வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள் நீலிமேடு ஆனந்தன், ரவிக்குமார், மாவடியான், தேர்வுக்குழு தலைவர்கள் மேகநாதன், தங்கராஜ், துணை தலைவர் ஐயாச்சாமி, செயற்குழு உறுப்பினர்கள் ரவிக்குமார், நாகராஜன், வேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 
கரூர் டி.எஸ்.பி கும்மராஜா இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ள அந்த கபாடி வீரர்களுக்கு ஊக்கத்தையும், பாராட்டுகளையும், அந்த வீரர்களுக்கு பயிற்சி அளித்த தமிழ்நாடு கோச் ரயில்வே சின்னப்பன், மேனேஜர் கரூர் பாலு ஆகியோரை பாராட்டி, ஊக்கப்பரிசினை வழங்கி கெளரவித்தார். கரூர் நகர காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜா சேர்வை, போலீஸ் பாய்ஸ் கிளப் அமைப்பாளர் ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் வாழ்த்திப்பேசினார்கள். கபாடி கழக செயலாளர் கபடி ராஜா நிகழ்ச்சி முடிவில் நன்றி கூறினார்.