டெல்லியில் 60,000 வாக்காளர்கள் மாயம்! ஆம் ஆத்மி அரசு மீது பா.ஜ. கபகீர் குற்றச்சாட்டு
வாக்காளர் பட்டியலில் உள்ள 60 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்களை காணவில்லை என்று அரசு மீது பாரதிய ஜனதா கட்சி குற்றம் சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சட்டசபைக்கு பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், ஆம் ஆத்மி, காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் குதித்துள்ளன.
இந்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் புதுடெல்லியில் மட்டும் 60,000 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக பாரதிய ஜனதா கட்சியை குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் பிரமுகர் பர்வேஷ் வர்மா என்பவர் கூறிய போது, "கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் டெல்லியில் 60 ஆயிரம் வாக்காளர்களின் பெயர்கள் மாயமாகி உள்ளன. மேலும், புதிய பட்டியலில் 20 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
மேலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால், யமுனை நதியை சுத்தப்படுத்துவோம். டெல்லியில் சுகாதாரமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்வோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால், டெல்லியில் 15 ஆயிரம் பேருந்துகளை இயக்குவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Edited by Siva