1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 27 ஜனவரி 2018 (18:38 IST)

கரூரில் முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி கைது

கரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 59 நபர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர். 

கரூரில் டிடிவி ஆதரவாளரும், முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சருமான வி.செந்தில் பாலாஜி கரூரில் டிடிவி தினகரன் தலைமையில் எம்ஜி ஆர் நூற்றாண்டு விழா கூட்டம் நடத்த மாவட்ட காவல் துறை மற்றும் நகராட்சியிடம் அனுமதி கேட்டிருந்தார். பல மாதங்கள் கடந்தும் அனுமதி கிடைக்கவில்லை.

இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனி அளிக்கப்பட்ட்து. நான்கு நாட்களுக்கு முன்பு இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜனவரி மாதம் 27,28, 29ஆம் தேதிக்குள் நடத்திக் கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டார். 

 
இதையடுத்து  டிடிவி ஆதரவாளர்கள் பொதுக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கும் வகையில் வெங்கமேடு மேம்பாலத்தில் சுவர் விளம்பரம் செய்து வந்தனர். அங்கு வந்த போலீசார் அனுமதி இல்லாமல் விளம்பரம் எழுதக் கூடாது. நீதிமன்ற உத்தரவு எங்களுக்கு வரவில்லை என கூறி சுவர் விளம்பரம் எழுதுவதை தடுத்து நிறுத்தினர்.

இதனால் அங்கு வந்த முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி நீதிமன்ற உத்தரவு இருந்தும் ஏன் தடுக்கின்றீகள் என காரணம் கேட்டு போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் வெங்கமேடு மேம்பாலத்தில் தனது ஆதரவாளர்களுடன் மறியலில் ஈடுபட்டார். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து முன்னாள் அமைச்சர் வி செந்தில் பாலாஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 59 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.