1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 26 ஜனவரி 2018 (09:16 IST)

குடியரசு தினத்தை கோலகலமாக கொண்டாடிய கரூர் பள்ளி - வீடியோ பாருங்கள்

69வது குடியரசு தினத்தை கரூர் அரசு பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள், இந்திய வரைப்படத்தை கோலப்பொடிகளால் வரைந்து சிறப்பாக கொண்டாடியுள்ளனர். 
 
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டியப்பட்டி பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகின்றது. தமிழ் வழிக்கல்வி, ஆங்கில வழிக்கல்வி ஆகிய இருவழிகளில் செயல்படும் இப்பள்ளியானது, ஏற்கனவே பல வித விழிப்புணர்வுகளையும், பலவித செயல்களையும் செய்து அப்பகுதி மட்டுமில்லாது, கரூர் மாவட்ட எல்லை மற்றும் திருப்பூர் மாவட்ட எல்லை பகுதி என்பதினால் இரு மாவட்ட மக்களின் ஆதரவை பெற்று மாணவ, மாணவிகள் திறமையான முறையில் பயின்று வருகின்றனர். 
 
இந்நிலையில், இந்தியாவின் 69 குடியரசுத்தின விழாவானது நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில்., இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர், ஆசிரியைகள் ஆகியோர் ஒன்றிணைந்து இந்தியாவின் வரைப்படத்தை கோலப்பொடிகளால் வரைந்தனர். 
 
மேலும், மாநிலங்களை கலர் கோலப்பொடிகளால் பிரித்து சுமார் 30 மீட்டர் அளவில் வரையப்பட்ட இந்த இந்தியா மேப்பில், பகத்சிங், மகாத்மா காந்தி, வீரபாண்டிய கட்டபொம்மன், காமராசர் உள்ளிட்ட ஏராளமான தியாகிகள், வீரர்கள் என்று பலவித முகமுடிகளை அணிந்து அவர்களுடைய புகழ்களையும், நாட்டிற்காக அவர்கள் சிந்திய வேர்வை, இரத்தத்தை பாடமாக எடுத்துரைத்ததோடு, இந்திய தேசிய சின்னங்களான தேசிய கொடி, தேசிய விலங்கு, தேசிய மலர் என்றெல்லாமும் அதன் சிறப்புகளையும் மாணவ, மாணவிகள் எடுத்துரைத்து, குடியரசுத்தினவிழாவை கொண்டாடினார்கள்.
 
மேலும், மாணவ, மாணவிகளின் பலூன் போட்டியும், அவர்களுக்காக கேக் வெட்டி கொண்டாடிய நிகழ்ச்சி பார்வையாளர்களையும், மாணவ, மாணவிகளையும் உற்சாகப்படுத்தியது. தற்போது தமிழகத்தில் தனியார் பள்ளி மோகங்கள் அதிகரித்து வரும் நிலையில் அரசுப்பள்ளியில் இது போன்ற சம்பவங்கள் நடுநிலையாளர்களையும், சமூக நல ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
 
பேட்டி : கோ.மூர்த்தி – தலைமை ஆசிரியர் – தொட்டியப்பட்டி அரசு துவக்கப்பள்ளி
- சி.ஆனந்தகுமார்