மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வருவது எப்போது? அமைச்சர் செந்தில் பாலாஜி
மாதாந்திர மின் கட்டண நடைமுறை அமலுக்கு கொண்டு வருவோம் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்த நிலையில், மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வரும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் இது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டவுடன் மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வரும் என்றும், தமிழ்நாட்டில் மூன்று கோடி இணைப்புகளுக்கு பொருத்தப்பட உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கணிசமான எண்ணிக்கையில் மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட வேண்டும் என்று மாநில அரசு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சார பயன்பாட்டை துல்லியமாக கணக்கிடும் வகையில் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டால், மின்வாரியம் மற்றும் பயனர்கள் ஆகிய இரண்டு தரப்புக்கும் நன்மையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Mahendran