திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 28 ஜனவரி 2018 (20:46 IST)

அதிமுகவினர் டிடிவி அணியினர் இடையே மோதல்

கரூரில் மீண்டும் அ.தி.மு.க.வினர் மற்றும் டி.டி.வி அணியினர் இடையே மோதல் ஏற்பட்டத்தில் போலீஸார் குவிக்கப்பட்ட்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கரூரில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் கூட்டம் டிடிவி தினகரன் தலைமையில் நடத்த கரூர் நகராட்சியின் அனுமதி பெற முன்னாள் அமைச்சர் வி.செந்தில் பாலாஜி பலமுறை அனுமதி கேட்டும், மறுக்கப்பட்ட்து. இதையடுத்து, கரூர் நகராட்சிக்குட்பட்ட திருவள்ளுவர் மைதானத்தில், பொதுக்கூட்டம் முறையாக நடத்த மதுரை உயர்நீதிமன்றத்தை செந்தில் பாலாஜி, நாடினார்.

இந்நிலையில் 27, 28, 29 ஆகிய மூன்று தேதிகளில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்பட்ட்து. ஆனால், கரூர் நகராட்சி நிர்வாகம் அனுமதி மறுத்து விட்டது. இந்நிலையில் வரும் 31 ஆம் தேதி நீதிமன்றத்தில் கரூர் நகராட்சி நிர்வாகம் பதில் அளிக்கும் படி நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.

கடந்த ஆண்டு 2017-ல் அக்டோபர் மாதம் இ.பி.எஸ் மற்றும் ஒ.பி.எஸ் சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்கான பழைய சுவர் விளம்பரத்தை அழித்து அதில் புதிய விளம்பரமாக டிடிவி தினகரன் அணியினர் எழுத முயற்சித்தனர்.

இந்நிலையில் வரும் பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்த நாள் வரும் நிலையில் நாங்கள் (இ.பி.எஸ் அணியினர்) அட்வான்ஸாக புக் செய்திருப்பதாகவும் அதில் எழுத கூடாது என்று அ.தி.மு.க வினருக்கும், டி.டி.வி ஆதரவாளர்களுக்கும்  இடையே பெரும் வாக்குவாதம் நடைபெற்றது.

இதனால் அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். பொதுசுவற்றில் ஏராளமான கட்சியினர் சுவர் விளம்பரம் செய்யும் நிலையில் நாங்கள் (டி.டி.வி அணியினர்) ஒன்னும் குறைவில்லை என்றும், எல்லா கட்சியினரும் எழுதுவதை போல, தான், நாங்களும் (டி.டி.வி) அணியினர் எழுதுவதாகவும் கூறியுள்ளனர்.

இது பெரும் வாக்குவாதமாக மாறியது. கரூர் டி.எஸ்.பி கும்மராஜா அந்த இடத்திற்கு விரைந்து, பொது இடத்தில் யாரும் சுவர் விளம்பரம் எழுத கூடாது என்றும் அப்படி எழுதினால், அதற்கு முன் அனுமதி பெற வேண்டுமென்று கூறி இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்நிகழ்ச்சியினால், சுமார் 3 மணி நேரம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.