திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 24 மே 2023 (17:26 IST)

முதலீடுகளை ஈர்க்க எந்த மாநிலத்தின் முதலமைச்சர் வெளிநாடு சென்றுள்ளார்? சீமான் கேள்வி

முதலீடுகளை ஈர்க்க இதுவரை எந்த மாநிலத்தின் முதலமைச்சர் வெளிநாடு சென்று உள்ளார் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பி உள்ளார் 
 
சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ள தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து முதலீடுகளை ஈர்க்க உள்ளார் என தமிழக அரசு அறிவித்திருந்தது 
 
இந்த நிலையில் இந்த செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்தின் முதலமைச்சராவது  முதலீடுகளை ஏற்க வெளிநாடு சென்று உள்ளார்களா என்றும் தமிழக முதல்வர் மட்டுமே இரண்டு முறை இரண்டு ஆண்டுகளில் வெளிநாடு சென்றுள்ளார் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran