1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. mk stalin comment about bjp budget

11 வருஷமா ஒன்னுமே கொடுக்கல!.. ரிசல்ட் தெரியும் போல!.. பாஜகவை விமர்சிக்கும் ஸ்டாலின்!...

modi stalin
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் துவங்கி 10 முகாம்கள் நிறைவடைந்துள்ளது. இது தொடர்பான விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அந்த விழாவில் திமுக ஸ்டாலின் பேசியதாவது;

நாம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வந்தால் மற்றொரு பக்கம் பாஜகவும் அதனுடைய கூட்டாளிகளும் வளர்ச்சியை தடுப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு முக்கிய உதாரணம்தான் சமீபத்தில் வெளியான பட்ஜெட். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு என்று எதுவுமில்லை. வழக்கமாக திருக்குறள் சொல்லி ஏமாற்றுவார்கள். இந்த ஆண்டு அதையும் சொல்லவில்லை.. பல வருடங்களாக நாம் சொல்லிவரும் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை.

வழக்கமாக தேர்தல் வந்தால் அந்த மாநிலத்தில் வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக பாஜக அள்ளிக் கொடுப்பார்கள். ஆனால் தமிழகத்தில் தேர்தல் வரும் நிலையிலும் தமிழ்நாட்டு மக்களுக்கு அவர்கள் எதுவும் செய்யவில்லை.. அவ்வளவு வெறுப்பு.

தமிழ்நாட்டுக்கு புதிய நெடுஞ்சாலைகள், ரயில்வே வழித்தடங்கள், மெட்ரோ ரயில் என பல கட்டமைப்பு வசதிகள் தேவை.. ஆனால் மத்திய அரசு நமக்கு எதுவும் கொடுப்பதில்லை. அதிக வரி வருவாய் வழங்குகிற தமிழ்நாட்டுக்கு மிகவும் சொற்பமான நிதியை திருப்பி கொடுக்கிறார்கள்.

11 வருடங்களாக இப்படித்தான் தமிழகத்தை வஞ்சித்து வருகிறார்கள்.. எப்படியும் தேர்தலில் நம் தோற்கத்தான் போகிறோம். தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டாம் என நினைத்து விட்டார்கள்... அதுதான் உண்மை’ என்று பேசியிருக்கிறார்.
About Writer
BALA
அடுத்த கட்டுரையில்
மக்கள் கஷ்டத்தில் இருக்காங்க!.. முதல்வர் தூங்குகிறார்.. கொந்தளித்த விஜய்