1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Criticism raised regarding Vijay dance

குற்ற உணர்ச்சியே இல்ல! விசில்னாலே ஆபத்து.. விஜய் ஆட்டம் குறித்து எழுந்த விமர்சனம்

தவெக
நேற்று தவெக கட்சி தொடங்கி மூன்று ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி அந்த கட்சி சார்பில் விழா நடத்தப்பட்டது. அந்த விழாவிற்கு கட்சி தலைவரும் நடிகருமான விஜய், அவருடைய தொண்டர்கள், கட்சியில் இருக்கும் முக்கிய பிரமுகர் என அனைவரும் கலந்து கொண்டு அந்த விழாவை சிறப்பாக நடத்தி இருந்தார்கள். அந்த விழாவில் பிரபல கிராமிய பாடகர் வேல்முருகன் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக்கினார்.
 
அப்போது வேல்முருகன் அவருடைய மகளுடன் சேர்ந்து விஜய்க்கு அன்பளிப்பாக ஒரு பரிசை கொடுத்தார். அதை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்ட விஜய் உங்களுடன் சேர்ந்து ஒரு நடனம் ஆடலாமா என கேட்டிருக்கிறார். அது தன்னுடைய பெரிய பாக்கியம் என வேல்முருகன் கூறியதோடு மட்டுமல்லாமல் வேல்முருகன் பாட விஜய் அந்த பாடலுக்கு ஏற்ப மேடையில் நடனமாடியிருந்தார்.
 
அதை கட்சி தொண்டர்கள் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இது ஒரு பக்கம் இருக்க விஜயின் நடனம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் தற்போது எழுந்து வருகின்றன. அதிமுக நிர்வாகி ஜெயக்குமார் இதைப் பற்றி கடுமையாக விமர்சித்திருக்கிறார். கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சியே இல்லை. 41 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
 
அதைப்பற்றி கூட அவர் கவலைப்படாமல் நேற்று நடனமாடி இருக்கிறார். கூட்டத்தில் கரூர் நெரிசல் பற்றி எதுவும் பேசவில்லை .விசில்னாலே ஆபத்துதான். விசில் எதற்காக அடிப்பார்கள்? ஆபத்து நேரத்தில் இருக்கும்போதுதான் அடிப்பார்கள். டைட்டானிக் படத்தில் கூட கடைசி கிளைமாக்ஸில் கூட விசில் அடித்து தான் அந்தப் பெண் தன்னை காப்பாற்றி கொள்வார்.
 
அதனால் விசில்னாலே எல்லோருக்கும் ஆபத்துதான். அவருடைய அந்த ஆட்டத்தை பார்க்கும் பொழுது அந்த 41 பேர் குடும்பங்களின் மனநிலை எப்படி இருக்கும்? தயவு செய்து யோசித்துப் பாருங்கள். ஒரு ஈவு இரக்கமில்லாத தவெக கட்சியின் தலைவராக இருப்பது அருவருக்கத்தக்க ஒன்றாகத்தான் நான் பார்க்கிறேன். தலைவருக்கே உண்டான அந்த அருகதை அவரிடம் கிடையாது என ஜெயக்குமார் கடுமையாக பேசியிருக்கிறார்.
About Writer
BALA