வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 24 மே 2023 (15:25 IST)

சாகணும்னு நினைச்சா சாராயம் குடிச்சு சாகுங்க.. ரூ.10 லட்சம் கிடைக்கும்: சீமான்

இனிமேல் யாராவது சாகவேண்டும் என்று நினைத்தால் பால்டாயில், எலி மருந்து போன்ற விஷத்தை தேட வேண்டாம், விஷச்சாராயம் குடித்து சாகுங்கள்,  வீட்டிற்கு பத்து லட்ச ரூபாயாவது கிடைக்கும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சமீபத்தில் விஷச்சாராயம் குடித்து 20 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கருத்து தெரிவித்தார் நாம் தமிழர் கட்சியின் சீமான் இந்த விவகாரத்தில் செந்தில் பாலாஜி மட்டுமின்றி அனைவருமே பதவி விலக வேண்டும் என்றும் ஆனால் அவ்வாறு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகும் அளவிற்கு நேர்மையானவர்கள் யாரும் இல்லை என்று தெரிவித்தார். 
 
மேலும் இனிமேல் யாராவது சாக வேண்டும் என்று நினைத்தால் பால்டாயில் எலி மருந்து போன்றவற்றை தேடி அலைய வேண்டாம் என்றும் விஷச்சாராயம் குடித்து செத்தால் வீட்டிற்கு பத்து லட்ச ரூபாய் கிடைக்கும் என்றும் அவர் கூறினார். அவரது இந்த கருத்தை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran