1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 ஏப்ரல் 2024 (11:39 IST)

தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு தொடக்கம்! வீட்டுக்கே சென்று வாக்கு சேகரிப்பு..!

தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று முதல் தபால் வாக்குகள் பதிவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேர்தல் பணி செய்பவர்களுக்கு தபால் வாக்குகள் இருக்கும் நிலையில் இன்று முதல் தபால் வாக்குகள் பதிவு செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களின் வீட்டுக்கே சென்று தபால் வாக்கு பெறும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டாலும் இந்த வாக்குகள் ஜூன் நான்காம் தேதி தான் எண்ணப்படும்  என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து தபால் வாக்குகள் உள்ள வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை பொறுப்புடன் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Mahendran