வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 4 ஏப்ரல் 2024 (08:44 IST)

பாஜக -3, பாமக -1: இந்தியா டிவியின் கருத்துக்கணிப்பில் ஆச்சரியம்..!

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் ஊடகங்கள் கருத்துக்கணிப்புகளை வெளியிட்டு வரும் நிலையில் இந்தியா டுடே கருத்துக்கணிப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த கருத்துக்கணிப்பில் திமுக கூட்டணிக்கு 26 தொகுதிகள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஒரு சில தேசிய மற்றும் மாநில ஊடகங்கள் திமுக கூட்டணிக்கு 30 தொகுதிக்கு மேல் கிடைக்கும் என்றும் சில தொலைக்காட்சிகள் 40க்கு 40 கிடைக்கும் என்றும் கூறிய நிலையில் இந்தியா டுடே கருத்துக்கணிப்பு 26 தொகுதி என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திமுகவுக்கு 18 தொகுதிகள், காங்கிரஸ் கட்சிக்கு 8 தொகுதிகள் கிடைக்கும் என்றும் மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் ஜெயிக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறியிருக்கிறது. மேலும் அதிமுகவுக்கு 4 தொகுதிகள் கிடைக்கும் என்றும் பாஜகவுக்கு மூன்று தொகுதிகள், பாமகவுக்கு ஒரு தொகுதி என்றும் அந்த கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

பாஜகவை பொருத்தவரை கன்னியாகுமரி, கோவை மற்றும் வேலூர் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் பொன் ராதாகிருஷ்ணன், அண்ணாமலை மற்றும் ஏசி சண்முகம் ஆகியவர்களின் வெற்றி உறுதி என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அதே நேரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் தோல்வி முகத்தில் இருப்பதாகவும் தெரிகிறது

மேலும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி நிச்சயம் வெற்றி பெறுவார் என்றும் கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது.


Edited by Siva