திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 29 செப்டம்பர் 2020 (11:03 IST)

தனி மீட்டிங் போட்ட ஓபிஎஸ்: முக்கியஸ்தர்கள் வீட்டில் ஆஜர்!!

துணை முதல்வர் ஓபிஎஸ் தனது வீட்டில் அதிமுகவின் முக்கிய நபர்களுடன் அலோசனையில் ஈடுப்பட்டுள்ளார்.
 
அதிமுக செயற்குழு ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் 5 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்றது. அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற காரசார விவாதம் நடைபெற்றதே தவிர அதற்கான தீர்வு எட்டப்படவில்லை.   
 
இந்நிலையில் செயற்குழு கூட்டம் முடிந்ததும் அமைச்சர் கே.பி.முனுசாமி முதல்வர் வேட்பாளர் யார் என்பதை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் அக்டோபர் 7 ஆம் தேதி அறிவிப்பார்கள் என தெரிவித்தார். 
 
இந்நிலையில், துணை முதல்வர் ஓபிஎஸ் தனது வீட்டில் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார். கடந்த முறை போல இந்த முறையும் இது அதிமுகவில் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும் என தெரிகிறது.